Homeகுற்றவியல்சுகர்புக் இணையத்தளத்தின் தோற்றுநர் பிடிபட்டார் !

சுகர்புக் இணையத்தளத்தின் தோற்றுநர் பிடிபட்டார் !

கோலாலம்பூர் | பிப்பரவரி 18:-

சுகர்புக் எனப்படும் ஆண்-பெண் சந்திப்புக் கள இணையத்தளத்தின் தோற்றுநர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

சிலாங்கூர் குற்றவியல் புலனாய்வுத் துறாஉயில் தலைவர் ஃபாட்ஸில் அகமாட் இவ்விவகாரம் குறித்துத் தெரிவிக்கையில், 34 வயது கொண்ட அந்த ஆடவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் தலைநகர் மோண்ட் கியாராவில் கைது செய்யப்பட்டதாக கூறினார்.

தொடக்கக் கட்ட விசாரணையில் அந்த ஆடவர் சுகர்புக் இணையத்தளத்தின் தோற்றுநர் என ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் தடுப்புக் காவலுக்கான விண்ணப்பத்தை வழங்கும் எனவும் அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more