Homeவர்த்தகம்பொங்கல் சமய விழா அன்று ; அது தமிழினத்தின் திருநாள் ! – ம.இ.கா. தமிழ்...

பொங்கல் சமய விழா அன்று ; அது தமிழினத்தின் திருநாள் ! – ம.இ.கா. தமிழ் மொழிக் குழு

கோலாலம்பூர் | பிப்பரவரி 19:-

தமிழ் – தெலுங்கு – மலையாளம் – உருது போன்ற இனங்களைஅ டிப்படையாக வைத்துத் தத்தம் மத நம்பிக்கையின் வழி கொண்டாடப்படுவதே பொங்கல். ஒருவரின் மதத்திற்கும் பொங்கலுக்கும் தொடர்பு இல்லை. பொங்கலைத் தமிழ் இந்துவும் கொண்டாடலாம். தமிழ் முசுலிமும் கொண்டாடலாம். தமிழ் கிருத்துவர்களும் கொண்டாடலாம்.

“இந்து தவறு, பொங்கல் ஒரு சமய விழா” என்று கூறும் மலேசிய இந்து சங்கத்திற்கும் அவர்களாது ஆதரவாளர்களுக்கும் ஓர் அறைகூவல். பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் :

  1. இந்துக்கள் (மதத்தின் அடிப்படையில்) கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் / திருநாளும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்குப் படைப்பார்கள். பொங்கல் எந்த தெய்வத்திற்குப் படைக்கப்படும் பண்டிகை ? (சூரியன் என பதில் சொல்லி தங்களது அறிவுக் கூர்மையை வெளிக்காட்ட மாட்டீர்கள் என நம்புகிறேன்)
  2. ஒவ்வொரு சமய விழாவிற்கும் பல நூறு பக்திப் பதிகங்களும் பாமாலைகளும் குழிந்துள்ள இந்து சமயத்தில், பொங்களுக்கான பதிகத்தையோ அல்லது பாமாலையையோ ஒன்றைக் காட்டுங்கள்.
  3. ஒவ்வொரு சமய விழாவிற்கும் புராணக் கதைகளும், சான்றுகளும் வரலாறும் இருக்கும் பட்சத்தில் பொங்கலுக்கான சமயச் சான்று / வரலாறு எதாவது ஒன்றைக் காட்டுங்கள்.

உங்களின் அறிவிவித்தனமான கொள்கைகளையும் கருத்துகளையும் எதிர்ப்பவர்கள் அனைவரும் பெரியார் – திராவிட கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. என் போன்ற மதத்திற்கும் இனத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாகத் தெரிந்த ஒரு தமிழ் இந்துவாகக் கூட இருக்கலாம் என மலேசிய இந்தியக் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தமிழ் மொழிக் குழுவின் தலைவர் தியாகசீலன் கணேசன் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more