ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நாளை (சனிக்கிழமை) வேட்புமனு தாக்கல்
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

நாளை (சனிக்கிழமை) வேட்புமனு தாக்கல்

கோலாலம்பூர், ஏப். 27-

மே 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் 14ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை சனிக்கிழமை நாடு தழுவிய நிலையில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 222 நாடாளுமன்றங்கள் மற்றும் சட்டமன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும்.

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றிற்கிடையே ஆட்சியைப் பிடிப்பதில் பலத்த போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்று இந்த தேர்தலை சந்திக்கவிருப்பதால் மலேசியாவைத் தாண்டி பெரும் பரபரப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.

பொது மண்டபங்கள், பள்ளி மண்டபங்கள், மாவட்ட அலுவலகங்கள் உட்பட 222 வேட்புமனு மையங்களில் காலை 9.00 மணி தொடங்கி 10.00 மணி வரையில் வேட்புமனு தாக்கல் நடைபெறும்.

ஏப்ரல் 28 வேட்புமனு தாக்கல் நாளாகவும், மே 5ஆம் தேதி முன் கூட்டியே வாக்களிக்கும் நாளாகவும், 9ஆம் தேதி பொது தேர்தல் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி காலாண்டு வரையில் நாடு முழுவதிலும் 14,940,624 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன