அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ரெம்பாவில் கைரியை இந்தியர்கள் தண்டிக்க வேண்டும்! ரபிசி கோரிக்கை
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

ரெம்பாவில் கைரியை இந்தியர்கள் தண்டிக்க வேண்டும்! ரபிசி கோரிக்கை

ரந்தாவ், ஏப். 28-
ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஸ்ரீராமின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே நிராகரித்தது தொடர்பில் ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் கைதி ஜமாலுடினை இந்தியர்கள் நிராகரிக்க வேண்டுமென பி.கே.ஆரின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி வலியுறுத்தினார்.

ரந்தாவ் சட்டமன்றம் ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளர் தனது வேட்புமனுவை அளிப்பதற்கு டத்தோஸ்ரீ முஹம்மட் ஹாசான், கைரி ஜமாலுடின் தரப்பினர் அனுமதிக்காதது கோழைத்தனமான செயல் என ரபிசி சாடினார்.

புத்ராஜெயாவில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் பல்லின மக்களைக் கொண்ட கூட்டணி மீது தேசிய முன்னணி எவ்வாறு பயப்படுகின்றது என்பதை வாக்காளார்கள் குறிப்பாக இந்திய வாக்காளர்கள் மதிப்பிட முடியும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

கைரியையும் தேசிய முன்னணியையும் தண்டிக்கும் வகையில் ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளர் லெஃப்டிணன் கர்னல் (பி) ரொஸ்லி அப்துல் கானிக்கு வாக்களிக்க வேண்டுமென தமதறிக்கையின் வாயிலாக ரபிசி கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீராம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அனுமதியளிக்கப்படாததால் முஹம்மட் ஹாசான் போட்டியின்றி வெற்றிப் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன