அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > துன் மகாதீர் கல்வியமைச்சர் பதவியை ஏற்பது தவறில்லை! அன்வார் இப்ராஹிம்
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

துன் மகாதீர் கல்வியமைச்சர் பதவியை ஏற்பது தவறில்லை! அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், மே 18-

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கல்வியமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளது நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் கொள்கையறிக்கைக்கு முரணானது அல்ல பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இது தேர்தல் கொள்கை அறிக்கைக்கு முரணானது அல்ல. எனக்கு தெரிந்த வரையில், பிரதமர் பதவி ஒரு துறை அல்ல என அவர் கூறினார்.

பிரதமர் பொதுவான முறையில் நாட்டை வழிநடத்துவார். அப்படித்தான், துணைப்பிரதமரும். இப்பதவிகள் ஒரு துறைகள் அல்ல என அன்வார் கூறியதாக டெ ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சர் பதவியை பிரதமர் கொண்டிருக்காத வரையில் இவ்விவகாரத்தில் பிரச்னை இல்லை என அன்வார் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் 12ஆவது வாக்குறுதியாக, பிரதமர் அமைச்சர் பதவியைக் குறிப்பாக, நிதியமைச்சர் பதவியைக் கொண்டிருக்க மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் நிதியமைச்சர் உள்பட முக்கிய பதவிகளை தனது அதிகாரத்திற்குள் வைத்திருந்ததால் நம்பிக்கைக் கூட்டணி இத்தகைய தேர்தல் வாக்குறுதியை அளித்தது.

முன்னராக, ஜ.செ.க.வின் ஆலோசகர் லிம் கிட் சியாங்கும் துன் மகாதீர் கல்வியமைச்சர் பதவியை ஏற்பதில் தவறில்லை என அவருக்கு ஆதரவாக கூறியிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன