கோலாலம்பூர், ஜூலை 12-

எனப்படும் மூன்றாம் இலகு இரயில் திட்டத்தின் செலவினம் 47 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ள நிலையில், அத்திட்டம் தொடரப்படவுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்திட்டத்தின் செலவு 3165 கோடி ரிங்கிட் என முன்பு கூறப்பட்டது. ஆனால், அச்செலவு தற்போது 1663 கோடி ரிங்கிட்காகக் குறைக்கப்பட்டுள்ளது.

எல்ஆர்டி3 இலகு இரயில் திட்டத்தைத் தொடரும் முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் செலவை பாதிக்கு பாதி குறைத்திருப்பதால், மக்களின் 1502 கோடி ரிங்கிட் சிக்கனப்படுத்தப்பட்டுள்ளது.

கிள்ளான், ஜோஹான் செத்தியாவில் இருந்து பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா வரைக்குமான 37 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த இலகு இரயில் திட்டம் அங்குள்ள 20 லட்சம் மக்களுக்கு பயன் தரும் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடர்வதற்காக முடிவு எடுக்கப்பட்டதாக, லிம் குவான் எங் கூறினார்.

மேலும், செலவினத்தை குறைப்பதற்காக இந்த இரயில் திட்டத்தின் பணிகள் 2020-லிருந்து 2024-ஆம் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.