சனிக்கிழமை, மே 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > புதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017!
அரசியல்இலக்கியம்முதன்மைச் செய்திகள்

புதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017!

கோலாலம்பூர், ஆக. 28-

தஞ்சோங் மாலிமில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடந்த உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு (ஆகஸ்ட் 27) மாலை நிறைவு பெற்றது.

இதர மாநாடுகளைக் காட்டிலும், மலேசியாவில் நடந்த இந்த தமிழ் இணைய மாநாட்டை தனேசு தலைமையில் இளைஞர் பட்டாளமே சிறப்பாக முன்னின்று நடத்தினர். பல சிறப்பு அம்சங்களும் இந்த மாநாட்டில் இடம்பெற்றன.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழ் இணையதளத்திற்கு ஏற்ப கலைச் சொற்கள் உருவாக்க வேண்டும்.

2. இணைய தளங்களில் தமிழ் வழியில் வணிகம் செய்ய கட்டமைப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

3. தமிழில் வெளிவந்துள்ள துறை சார்ந்த நூல்களை இணையதளங்களில் பார்க்கும் வசதி செய்ய வேண்டும்.

4. உலகளவில் தமிழைக் கற்க இணையதளங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டில் குறள் வெண்பா இணையகுறள் இடம்பெற்றது. இதை எழுத்தாளர் ஜமுனா வேலாயுதம் எழுதியிருந்தார்.

உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை
இணையத் தளம்புகுவே மாமகுடம்

இதயம் புகுந்த மூத்த மொழியே உந்தன் ஆளுமை இணையத் தளம்வரை சேர்ந்திருப்பது இணையத்திற்கே கிடைத்த மிகப்பெரிய பெருமை

மாநாட்டுப் பண்
(எழுத்து ஜமுனா வேலாயுதம், குரல் : உஷா துரை

 

தமிழ்மொழியே எங்கள் தாய்மொழியே
உன்வழியே எங்கள் வாய்மொழியே..!

தொல்காப்பியமே தலை என்றாய்…
ஐம்பெரும் காப்பியமே பெரும் விலை என்றாய்…
இயல் இசை நாடகம் உன் உயிர் என்றால்..
இலக்கணம் இல்லகியம் உன் நிகர் அன்றோ..

உன் திருமேனியில் முத்திரு உண்டு…
திருக்குறள் திருப்புகழ் திருவாசகம் எனும் தேன்…

எத்தனை ஆளுமை உனக்குள்..!
அத்தனை எளிமை அதற்குள்..!
ஒலியாய் மொழியாய் திரிந்தாய்..
வானம் முழுக்க விரிந்தாய்…
இன்று இணையத்தால் உலகமே அளந்தாய்…

தமிழ்மொழியே எங்கள் தாய்மொழியே..
உன் வழியே எங்கள்
வாய்மொழியே..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன