Homeமலேசியாநாடு முழுவதும் உள்ள காவல்துறை பயிற்சி மையங்கள் இடைக்கால இயக்கத் தடை

நாடு முழுவதும் உள்ள காவல்துறை பயிற்சி மையங்கள் இடைக்கால இயக்கத் தடை

கோலாலம்பூர் | பிப்பரவரி 13:-

கோவிட்-19 தொற்று நேர்வுகள் நாட்டில் உள்ள அனைத்துக் காவல்துறை பயிற்சி மையங்களில் (Pulapol) அதிகரித்துள வேலையில் அவை அனைத்தும் தற்காலிகமாக இயங்குவதில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது என புக்கிட் அமான் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் குற்றப் புலனாய்வுத் துறையில் இயக்குநர் இரம்லி டின் தெரிவித்தார்.

இது வரையில் 41 காவல்துறை பயிற்சி மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று கண்டுள்ளவர்கள் கோலாலம்புர் காவல்துறை பயிற்சி மையத்தில் தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 78 காவல்துறை பயிற்சி மாணவர்கள் கோவிட்-19 கண்டுள்ள நிலையில், அவ்வெண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறினார்.

எனவே, தற்போதைய சூழல் மாறி இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு காவல்துறை பயிற்சி மையங்கள் மீண்டு இயங்க அனுமதிக்கப்படும்.

கோலாலம்பூர், ஜோகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, திரங்கானு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் காவல்துறை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வந்தன.

மலேசிய சுகாதார அமைச்சுடன் இணைந்து கோலாலம்பூரிலும் ஜோகூர், சிகாமாட்டிலும் உள்ள காவல்துறை பயிற்சி மையங்களில் கிருமிநாசிணித் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்ற மாநிலங்களிலும் கோவிட்-19 நேர்வுகள் குறைந்த அளவே இருந்தாலும் கிருமிநாசிணித் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 காலத்தில் காவல்துறை பணிகளுக்கான ஆள் சேர்ப்பு குறித்து அவர் தெரிவிக்கையில், வழக்கம் போல் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாலும் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.

தற்சமயம் 7,200 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும் அவற்றில் 3,200 இடங்கள் மட்டுமே நிறைவு செய்யப்படும்.

மொத்தமாக காலியாக இருக்கும் 7,200 பணியிடங்கள் இப்போதைக்கு நிரப்படாது. காரணம் ஆவல்துறை பயிற்சி மையங்களில் தற்போது தனியாள் பாதுகாப்பு கவசங்கள் போதுமானதாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.

தற்போது காவல்துறை அதிகாரிக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அனைத்து காவல் துறை பயிற்சி மையங்களில் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறை பின்பற்றப்படும் என்றார் அவர்.

spot_img

latest articles

explore more