கோலாலம்பூர் | பிப்பரவரி 13:-
மலேசியாவில் கோவிட்-19 தாக்கம் தொடங்கியது முதல் இன்று வரை அந்நோய்க்கு எதிரானப் போர்ரட்டக் களத்தின் தளபதியாகத் திகழ்கிறார் மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா.
இந்தப் போராட்டக் களத்தில் கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அந்நோயை முழுதாய் துடைத்தொழிப்பதற்கும் அரும்பாடு பட்டு பல விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
தனது முகநூல் , டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் அன்றாடம் கோவிட்-19 நிலவரத்தையும் மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார்.
குறிப்பாக நேற்று பிப்பரவரி 12 ஆம் நாள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நோர் ஹிஷாம் தனது குடும்பத்தினரோடு ஒன்றாக நடைப் பயிற்சி மேற்கொள்ளும் படத்தையும் பதிவிட்டார்.
உடல் நலத்தைப் பேணும் வாழ்க்கை முறையையும் நாம் ஒன்றாக மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட நோர் ஹிஷாம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற தமிழ் பழமொழியும் இதைக் கூறுகிறது எனப் பதிவிட்டு அந்தப் பழமொழியை தமிழிலேயே பதிவிட்டிருக்கிறார்.


