முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியில்* தொடக்கக்கல்வியை 6 ஆண்டுகள் பயின்று இவ்வாண்டு சித்தியாவான் ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளி, படிவம் 4 – இல் பயிலும் ஷாலினி த/பெ பூபாலசந்தர் அனைத்துல அளவில் *தமிழ்மொழி மேடைப்பேச்சுப்* போட்டியில் வாகை சூடினார்.

இந்த மேடைப்பேச்சுப் போட்டியை Vibrant Education* தலைமையில் International Budding Star 2021 என்ற பெயரில் நடைப்பெற்றது.

இப்போட்டி இயங்கலை (Online) வழி நடத்தப்பட்டது. இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பிரிவில் மேடைப்பேச்சுப் போட்டியில் இவர் கலந்து கொண்டார். இப்போட்டி 3 நாட்கள் நடைப்பெற்றன.

29 முதல் 31 சனவரி 2021 வரையில் 600 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். உலக அளவில் 5 நாடுகள் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா, மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், சிங்கப்பூர் போன்ற நாடுகள் இப்போட்டியில் கலந்து கொண்டன.

தாய்மொழி எனும் தலைப்பில் இவர் பேசினார். உலக அளவில் சிறந்த பேச்சாளர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
6 பிப்பரவரி 2021 அன்று போட்டியின் முடிவுகள் வெளிவந்தன.
ஷாலினி த/பெ பூபாலசந்தர் முதல் நிலையில் வாகை சூடியதாக அறிவிக்கப்பட்டது.

இம்மாணவி இந்த அளவுக்குச் சாதனை படைக்கத் தூண்டிய இவரது பெற்றோர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். இம்மாணவியை நன்கு பயிற்றுவித்த இம்மாணவியின் பெற்றோருக்கு இவ்வேளையில் நாம் நன்றி கூறிதான் ஆக வேண்டும்.

முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியில் இவருக்குத் தமிழாற்றலை வளர்த்த அனைத்துத் தமிழாசிரியர்களின் சேவை அளப்பெரியது.

இவரது தொடக்கக்கல்விக் காலத்தில் தலைமையாசிரியராக இருந்தவர் இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு.தனஸ்கோடி சுந்தரராஜூ ஆவார். இம்மாணவிக்கு அவ்வப்போது ஊக்கத்தைத் தந்தவர். அவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக, தமிழ்மொழிப் பணித்தியக்குழுத் தலைவர் ஆசிரியர் திரு.லோகநாதன் இராமு அவர்கள் இம்மாணவியின் தமிழ்மொழி பேச்சாற்றலுக்கு நிறைய பங்களித்து உள்ளார்.

அதனோடு, இவருக்குப் பேச்சுத் திறமையை நெறிப்படுத்தித் தந்தவர் ஆசிரியர் திரு.கோபால் சண்முகம். பல மேடைப்பேச்சுப் போட்டியில் இம்மாணவியைக் களம் இறக்கியவர். இவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இம்மாணவியின் தமிழாற்றலை மேலும் மெருகூட்டியவர் இவரது ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளியின் தமிழாசிரியை திருவாட்டி பார்வதி முனியப்பன் ஆவார். இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் ஊட்டியவரும் இவரே ! இவருக்கும் நன்றி மலர்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு :-
2016-இல் சென்னையில் (தமிழ்நாடு) நடைப்பெற்ற அனைத்துலகப் பேசு தமிழா பேசு* எனும் மேடைப்பேச்சுப் போட்டியில் முதல் நிலையில் வாகை சூடியவர் சிவராஜ் த/பெ லிங்கராஜ். இவரும் தொடக்கக்கல்வியை முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியில்தான் கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(கல்லூரி & பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான போட்டி)
இவரைப் போன்றே 2021- இல் அனைத்துல அளவில் முதல்நிலையில் வாகை சூடியவர் ஷாலினி த/பெ பூபாலசந்தர் ஆவார்.