பூச்சோங் : பிப்பரவரி 17:-

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இரண்டாம் கட்டமாக நடப்பு வந்தட்தும் மலேசியர்களில் பெரும்பான்மையானவர்கள் வருமானம் பாதிக்கப்பட்டு திண்டாடினார்கள்.

பொருளாதாரத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு பூச்சோங் வட்டாரத்தில் சில பொது இடங்களில் பேழை அமைத்து அதில் சமையலுக்குத் தேவையானப் பொருட்களையும் சில உணவுப் பொருட்களையும் தனது சொந்த செலவில் பொது மக்களுக்காக ஏற்பாடு செய்து தந்திருக்கிறார் சுபாஷினி.

கணவர் ராஜ்ஜுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்ளும் இவர் இன்னும் பல இடங்களுக்கு இந்த உதவியை நீட்டிக்க இருப்பதாகத் அநேகனிடம் தெரிவித்தார்.

குறிப்பாக, சமையலுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களோடு குழந்தைகளுக்குத் தேவைப்படும் அரையாடை உட்பட பல பொருட்களை வாங்கி அடுக்கியுள்ளார்.

இஃது இவரின் முதற்கட்ட முயற்சி என்பதால் தன்னுடைய சொந்தப் பணத்திலேயே இதனை ஏற்பாடு செய்திருக்கிரார். மேலும், யாரால் இயலுமோ அவர்கள் இங்கு வந்து தங்களால் இயன்றப் பொருட்களை வைத்துவிட்டுச் செல்லலாம். தேவைப்படுவோர் இங்கு வந்து தங்களுக்குத் தேவையானையை மட்டும் எடுத்துச் செல்லலாம் என சுபாஷினி தெரிவித்தார்.

மேலும், பூச்சோங்கைத் தாண்டி சுபாங், ஷா ஆலாம் போன்ற வட்டாரங்களுக்கு இந்த உணவு வங்கியை ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் சுபாஷினி தெரிவித்தார்.

இன்னும் மனித நேயம் இருக்கிறது எனவும் சமூக ஊடகங்களிலும் இந்த முன்னெடுப்பு குறித்து ஆதரவு பெற்றதாகவும் குறிப்பிடும் சுபாஷினி, மற்றவர்களும் இதனை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு தங்களின் வட்டாரங்களில் இந்து போன்ற உணவு வங்கியைத் தொடங்க ஊக்குவிப்பாக இருக்கும் எனவும் புன்னகை மலர கூறினார் சுபாஷினி.