Homeகுற்றவியல்பந்தாய் டாலாமில் தீ விபத்து : ஆறு கார்கள் நாசம்

பந்தாய் டாலாமில் தீ விபத்து : ஆறு கார்கள் நாசம்

பந்தாய் டாலாம் | பிப்பரவரி 18:-

பந்தாய் டாலாமில் அமைந்துள்ள பந்தாய் ரியா மக்கள் குடியுருப்புப் பகுதி PPR  வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து எற்பட்டுள்ளது. அந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு கார்கள் முற்றாக அழிந்ததாக தீயணப்பு அதிகாரி ஷாருல் அஸ்வான் தெரிவித்தார்.

அத்தீ விபத்தில் ஒரு மிட்சுபிஷி டெலிக்கா வேன், 2 மைவி, ஒரு பெரோடுவா பேஸ்ஸா, ஒரு டொயோட்டா வியோஸ், ஒரு கெலிசா ஆகிய கார்கள் அவை.

தீயணைக்கப்பட்டு சம்பவ இடத்தைச் சோதனையிட்டபோது அங்கு கிடைத்த ஒரு புட்டியில் பெட்ரோல் நிரப்பப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் சொன்னார்.

மேலும், தீயில் அழிந்த மைவி, மிட்சுபிஷி வேன் ஆகிய வண்டிகளுக்கு முன்புறம் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தீ விபத்துக்கானக் காரணமும் எற்பட்டுள்ள சேதம் குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more