ஜார்ஜ்டவுன், ஜூலை.16-
இளம்பெண் ஒருவரை மானபங்கம் படுத்தியதாகக் கைதான ஜசெக பிரமுகருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக மாவட்ட போலீஸ் அதிகாரி அனுவார் ஒமார் தெரிவித்தார். இந்த விசாரணை அறிக்கை திங்கட்கிழமை அரசு துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஜூலை 6-ஆம் தேதி 21 வயதுடைய மாணவியை மானபங்கம் செய்ததாக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்பு உதவியாளருமான ஜசெக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தடுப்புக் காவலில் அவர் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த மானபங்க விவகாரத்தில் தொடர்புடைய பல அம்சங்களைத் தாங்கள் திரட்டியுள்ளதாகவும் அந்தப் பெண் அணிந்திருந்த மேலாடை மற்றும் உள்ளாடை ஆகியவைகளும் மீட்கப்பட்டுள்ளன என்று வடகிழக்கு மாவட்ட குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி அனுவார் ஒமார் குறிப்பிட்டார். ஸ்பீச் ஸ்திரீட்டிலுள்ள ஒரு கேளிக்கை மையத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நடந்ததாக 41 வயதுடைய அந்தப் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.