அம்பாங் | 18/9/2021 :-
இங்குள்ள ஒரே இந்து மயனானத்தின் முன் புறம் அம்பாங் மாநகர் மன்றத்தின் பொருந்தாத இரண்டு திட்டங்களை எதிர்த்ததால் தற்போது அங்குள்ள கோயிலுக்கும் இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்பாங் தொகுதி ம.இ.கா. தலைவர் டத்தோ முனியாண்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜாலான் கோலாம் ஆயேர் லாமா எனும் இடத்தில் அமைந்துள்ள இந்து மயனாத்தின் அருகில் சில உணவங்காடிகள் உள்ளன. மயானத்தின் இடது புறத்தில் புதிய உணவுக் கூடம் (FOODCOURT) கட்டப்பட இருப்பதாகவும் மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடத்தை மயானத்தின் முன்புறமே நிர்மாணிக்க இருப்பதாகவும் அம்பாங் மாநகர் மன்றத்தின் திட்டத்தை டத்தோ முனியாண்டி விளக்கினார்.

மேலும், அதற்கு அருகிலேயே Anaerobic Digester என்று சொல்லக்கூடிய உணவுக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் பெரும் இயந்திரத்தையும் நிர்மாணிக்க இருப்பதாக மாநகர் மன்றம் திட்டமிட்டிருப்பதை விளக்கிய டத்தோ முனியாண்டி, அதனை எதிர்த்து குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அம்மயானத்தின் முன் புறம் உள்ள சிறியக் கோயிலை மாநகர் மன்றம் உடைக்கப்போவதாக தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
இதற்கு முன்னர் வேறொரு இடத்தில் இந்த இரண்டு திட்டங்களும் நிர்மாணிக்கப்பட இருந்தன. அங்குள்ள மக்களின் எதிர்ப்புக்குப் பின்னர் தற்போது அம்பாங்கில் உள்ள மயானத்திற்கு முன்புறம் திட்டமிடப்பட்டு வேலியும் அமைக்கப்பட்டு விட்டன.
அம்பாங் வாழ் மக்களையோ அல்லது இந்த மயானத்தின் நிர்வாகக் குழுமையோ கேட்காமலேயே இஅவை அனைத்தும் நடப்பதாக டத்தோ முனியாண்டி சொன்னார்.

இந்தத் திட்டங்களுக்கு மாண்புமிகு ஸுரைடாவின் தரப்பில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அம்பாங் மாநகர் மன்றத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் டத்தோ முனியாண்டி குற்றஞ்சாட்டினார்.
பால்லாண்டுகாலமாக மயானத்தில் இறுதிச் சடங்குகள் முடித்த பின்னர் இக்கோவிலில் இறைவனைத் தொழுது விட்டுச் செல்வது இந்துக்களின் வழக்கமாகும். பல்லாண்டுகாலம் இல்லாமல் இப்போது மட்டும் இக்கோயிலைக் குறி வைக்கும் மர்மம் என்ன ?
இவ்விவகாரம் குறித்து காவல்துறையில் புகார், அம்பாங் மாநகர் மன்றத்திற்குக் கடிதம், சட்டமன்ற அலுவலகத்திற்குக் கடிதம், அமைச்சர்களாக இருக்கும் ஸுரைடா, அஸ்மின் அலி ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டும் இது வரையில் எந்தவித பதிலும் கிடைக்கப்பெற வில்லை என டத்தோ முனியாண்டி சொன்னார்.
சமய விவகாரங்களில் இது போன்று தவறான முறையில் கையாளப்படுவது கண்டிக்கத்தக்க ஒன்று.
பண்டான், அம்பாங்,, உலு கிள்ளான் ஆகிய வட்டாரங்களில் இருக்கும் அனைத்து இந்துக்களுக்கும் ஒரே மயானம் இதுதான்.
ஒரு வேளை குறிப்பிட்ட அந்த இரு திட்டங்களும் இங்கு நிமாணிக்கப்பட்டால், அந்த உணவுக் கூடத்திற்கு வருகிறவர்கள் மயானத்தின் நுழைவாசலில் வாகனத்தை நிறுத்துவார்கள். பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் எதையாவது பார்த்து பயந்து விட்டால், அதைக் காரணமாகக் காட்டி மயானத்தையே எடுக்கச் சொல்வார்களா ? ஒரு கால் நடந்தாலும் நடக்கலாம்.
இவ்விவகாரம் குறித்து ம.இ.கா.வின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன், மனிதவள அமைச்சரும் ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் ஆகியோரின் பார்வைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
FOOD COURT திட்டம் கொண்டு வரப்பட்டால், அதனைச் சார்ந்து உணவுக் கழிவுகள் சுத்திகரிப்பு உயந்திரமும் வாடிக்கையாளர்களின் வாகன நிறுத்துமிடமும் மயானத்தின் முன்புறம் நிர்மாணிக்கப்படும் போது கண்டிப்பாக கோயில் உடைக்கப்படும். மேலும், மயானத்தின் ஒரே வாசலில் வாகன நிறுத்துமிடம் வந்தால், கண்டிப்பாக இடைஞ்சலாகத்தான் இருக்கும்.
இவ்வெதிர்ப்புக்குப் பிறகு எதிரவரும் 24ஆம் நாள் அம்பாங் மாநகர் மன்றத்தாருக்கும் மயானத்தின் நிர்வகிப்பாளர்களுக்கும் இடையேயான சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் இதரத் தரப்புக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டதாக டத்தோ முனியாண்டி கூறினார்.

மயானத்தின் எதிர்ப்புறத்தில் கெபோயா எனும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. முதன்மைச் சாலையாக இருக்கும் இவ்விடத்தில் உணவுக் கழிவுகளைச் சுத்திகரிகும் இயந்திரத் திட்டம் ஏதுவானதல்ல. இது நம் மயானம். நாம் தான் முன்னின்று காக்க வேண்டும்.
எம்.பி. இராஜா,
சிலாங்கூர் மாநில ம.இ.கா. தலைவர்

தேசிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் இந்த இடத்திற்குத் தொல்லை கொடுத்ததில்லை. மலேசியக் குடும்பம் எனும் கொள்கையின் அடிப்படையில் அனைத்து மக்களின் அனைத்து விவகாரங்களும் காக்கப்பட வேண்டும். அம்பாங் ம.இ.கா. கையில் எடுத்திருக்கும் இப்பிரச்சனைக்கு அம்னோவின் ஆதரவு என்றும் இருக்கும். மேலும், இவ்விவகாரத்தைத் தீர்ப்பதற்கு மேல்மட்டத்திற்குக் கொண்டு செல்ல உறுதுணையாக இருப்போம். அதிகாரத்துவத்தினர் உள்ளூர் மக்களிடம் இது குறித்து பேச வேண்டும்.
துவான் நிஸாம்,
அம்பாங் தொகுதி அம்னோ தலைவர்,
அம்பாங் தொகுதி தேசிய முன்னணித் தலைவர்

அம்பாங் மாநகர் மன்றமும் சிலாங்கூர் மாநில அரசும் மக்களின் மீது பரிவே இல்லாமல் நடந்து கொள்கிறது. Anaerobic Digester எனும் உணவுக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் இயந்திரத்தை இது போன்ற மக்கள் குடியிருப்புக்கும் நகரின் மையத்திலும் நிர்மாணிப்பது தவறாகும். நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் இருக்கும் சிலாங்கூர் மாநில அரசு வேண்டுமென்றே சமய விவகாரத்தில் இது போன்ற தேவையில்லாத பிரச்சனைகளஐ ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டங்களை உடனடியாக நிறுத்தி தொழில்பேட்டைகள் இருக்கும் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
டத்தோ கலைவானர், நம்பிக்கை இயக்கத்தின் தலைவர்