லுமுட், ஏப்.23-
இங்குள்ள லுமுட் அரச மலேசிய கடற்படை தளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த 10 பேரின் வாரிசுகளுக்குச் சிறப்பு நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
தங்களின் குடும்ப உறுப்பினரை இழந்து துயருறும் வாரிசுகளுக்கு அரசாங்கம் சமூக ரீதியிலும் அனைத்து வகையிலும் உதவிகளை நல்கும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.
அவ்வகையில் சமூகநல ரீதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவர்களுக்குச் சிறப்பு நிதியை விரைவில் அறிவிப்பார் என்று இங்குள்ள லுமுட் நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.





