கோலாலம்பூர் | பிப்பரவரி 14:-
சாலைத் தடுப்புச் சோதனைகளில் இரு பெண் வாகனமோட்டிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக புக்கிட் அமான், உயர்நெறி – கட்டொழுங்கு பிரிவின் இயக்குநர் ஸம்ரி யாஹ்யா கூறியுள்ளார்
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்த இரு பெண்கள் மருத்துவ வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் கடந்த சனவரி 13 முதல் அதிகமான சாலைத் தடுப்புச் சோதனைகள் போடப்பட்டுள்ளன.
கடந்த பிப்பரவரி 11ஆம் நாள் சாலைத் தடுப்புச் சோதனையில் நிறுத்தப்பட்ட ஒரு பெண்மணியிடம் இருந்து சோதனை எனும் பெயரில் காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்பு எண்ணைப் பெற்றுக் கொண்ட பின்னர் குறுஞ்செய்திகளை அனுப்பி அறிமுகம் செய்துகொள்ளக் கேட்டுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து அந்தப் பெண்மணி காவல்துறையில் புகாரையும் கொடுத்துள்ளார்.
இன்னும் குறிப்பாக, இதே போல் வேறொரு சாலைத் தடிச் சோதனையில் மெண் வாகனமோட்டியிடம் உள்ளாடை அணியாதது குறித்தும் கேட்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.


