Homeமலேசியாஎழுத்துச் சீர்திருத்தத்தை பயன்படுத்திவரும் மோகன் ஷானும் திராவிடக் கொள்கைவாதி ஆவாரா ? - குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகம்

எழுத்துச் சீர்திருத்தத்தை பயன்படுத்திவரும் மோகன் ஷானும் திராவிடக் கொள்கைவாதி ஆவாரா ? – குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகம்

ஈப்போ | பிப்பரவரி 18

தமிழ்ப்பணி செய்தவர்களையும் தமிழுக்காகத் தொண்டாற்றியவர்கலையும் அவமதிப்பதை மலேசிய இந்து சங்கம் நிறுத்த வேண்டும் என ஈப்போ குறீஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய புறக்கணிப்பும் திராவிட கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகக் கல்வியமைச்சை இந்து சங்கம் சாடியுள்ளது. குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்ப்பள்ளிக்கான ஆறாம் ஆண்டுப் புத்தகத்தில் பெரியாரின் கொள்கையும் அவரைப் பற்றிய செய்தி திணிப்பும் இந்து சமய புறக்கணிப்பும் மேலோங்கி இருப்பதாக மலேசிய இந்து சங்கத் தலைவர்  மோகன் ஷான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்மொழி பாட நூலில் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) எனும் வீரமாமுனிவர், ஈ. வே. ரா. பெரியார் ஆகியோர் ஆற்றியத் தமிழ்ப்பணிகள் குறித்த தகவல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அவர்களின் அரசியல் கொள்கைகளோ சித்தாங்களோ இடம் பெறவில்லை எனத் தெளிவு பெற வேண்டும்.

குறிப்பாக, பெரியாரின் முதன்மைக் கொள்கைகளான கடவுள் மறுப்பு, சாதிய ஒழிப்பு, சிறார் திருமணம், மது ஒழிப்பு போன்றவைகள் அங்கு பேசப்படவே இல்லை என்பதை மோகன் ஷான் அறிந்துதான் அறிக்கை விட்டாரா என பிரபு வினவியுள்ளார்.

பெரியாரின் உருவப் படத்தையும் அவர் சார்ந்த வரலாற்றுத் தகவலையும் பாட நூலில் இணைத்திருப்பதால் பாதகம் ஏற்படுத்தும் என மோகன் ஷான் குறிப்பிட்டிருக்கும் வேளையில், பெரியார் ஏற்பாடுத்திக் கொடுத்திருக்கின்ற எழுத்து சீர்திருத்த முறையை மோகன் ஷான் உட்பட அனைவருமே ஏறத்தாழ 1935ஆம் ஆண்டு முதல் இன்று வரை பயன்படுத்தி வருகின்றோமே, அப்படியென்றால், மோகன் ஷான் உட்பட அனைவருமே  பெரியாரின் பாதிப்புக்கு உட்படுத்தப்பட்டு அவர் வழி சென்று விட்டோமா ?

மேலும், தை முதல் நாளை பெரும்பாலான தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் மோகன் ஷான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விவகாரத்தில் மலேசிய இந்து சங்கத் தலைவர்ர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அவமதிப்பைச் சம்பாதிக்க வேண்டாம்.

தமிழருக்குத் தொடராண்டு முறை நாட்காட்டி வேண்டும் என்று தமிழறிஞர்கள் ஒன்றுகூடி 1921ஆம் ஆண்டு முடிவு செய்தனர். தற்போதைய ஆங்கில ஆண்டு எண்ணிக்கையில் 31 ஆண்டுகள் சேர்த்தால் திருவள்ளுவர் ஆண்டு எண்ணிக்கை கிடைக்கும் என்பதையும் அதன் சான்றாக இன்றும் மலேசிய நாளிதழ்களில் தி.ஆ. 2052 என தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவதையும்மோகன் ஷான் கண்களில் மட்டும் படவில்லையா ?

இனத்துக்கும் மதத்துக்கும் வேறுபாடு தெரியாத மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் தெளிவாகத் தமிழைக் கற்று அறிந்து தமிழின் வரலாறு , பண்பாடு ஆகியவை என்னென்ன என்பதை அறிந்து தெரிந்த பின்னரே அவ்விவகாரம் தொட்டு அறிக்கை விடவும் பேசவும் வேண்டும் என பிரபு மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷானைக் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more