கோலாலம்பூர் | பிப்பரவரி 20

மலேசியா வரலாற்றில் முதன் முதலாக தமிழ்மொழியை மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அறிந்தேற்புடன் (அங்கீகாரம்)  தமிழ்மொழிக் காப்பகத்தை 3 மே 2019-இல்முந்தைய துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங்கால்அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கப்பட்டது. இக்காப்பகம் தமிழ்மொழியை எல்லாக் கோணங்களிலும் தரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்பதனை அறிந்து மலேசியத் தமிழர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இன்றைய துணைக் கல்வி அமைச்சர் சிறப்பு அதிகாரி குணசீலன் நரசம்பு தேசியக் கூட்டணி அரசாங்கம் தமிழ்மொழிக் காப்பகத்தை அறிந்தேற்கவில்லை என்றுநாளிதழ் அறிக்கையின் மூலமாக மலேசியத் தமிழர்கள் தலையில் இடியை இறக்கிருக்கிறார் என மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் தமிழகரன் கூறியுள்ளார்.

ஆட்சி மாறினாலும் சீன மொழிக் காப்பகம் ஒதுக்கப்படவில்லை மாறாக,மேலும் வலுப்படுத்தினார்கள். அது தான் அவர்களின் மொழிப்பற்று. அக்காப்பகம் கௌரவத் தலைவராக கல்வித் துணையமைச்சரே பொறுப்பேற்பார். இதுவரை அம்மரபே பின் தொடரப்படுகிறது. இன்றைய கல்வித் துணையமைச்சரே சீன மொழிக் காப்பகத்திற்கு தலைவர்.

ஆனால், தமிழ்மொழிக் காப்பகத்திற்கும் மட்டும் ஏன் இந்தவிதி விலக்கு?

தமிழ்மொழி அல்லது அதன் தலைமைத்துவத்தின் மீதான காற்புணர்ச்சியினால் தமிழ்மொழிக் காப்பகத்தை குழித்தோண்டி புதைக்க முற்படுகிறார்களா?

தமிழ்மொழிக் காப்பகத்தை வைத்து அரசியல் செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்கு முன் இயங்கியதுப் போல தமிழ்மொழிக் காப்பகம் கல்வி அமைச்சு அறிந்தேற்புடன் செயல்பட வேண்டும் என்பதே மலேசியத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

பொங்கலே புத்தாண்டு என்று கையேடு தயாரித்தது தான் சிக்கல் என்றால் தமிழ்மொழிக் காப்பகத்துடன் கலந்துப்பேசுங்கள் அதை விடுத்து கீழறுப்பு செய்யாதீர்கள். பொங்கலுக்கு இந்து அமைப்புகளினால் மதச் சாயம் பூசி பள்ளிகளில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கல்வி அமைச்சு தடைவி தித்தப்போது மீட்டெடுக்க இங்கு ஒருவர் கூட முன்வரவில்லை.

ஆனால் தமிழ்மொழிக் காப்பகம் தானாகமுன் வந்து பொங்கல் என்பது பண்பாட்டு பெருவிழா. சமயத்திற்கும், மதத்திற்கும் தொடர்பில்லை என்று விளக்கி கையேடுகளைத் தயாரித்திருக்கிறது என்று அறிகிறோம். அது இங்கு பலருக்குப் பொறுக்கவில்லை.

திரு குணசீலன் தன் அறிக்கையில் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டா ? என்று முடிவெடுக்கும் அதிகாரம் இந்துச் சங்கமும் இன்னும் பிற இயக்கங்களுக்குத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொங்கலும் தமிழ்ப்புத்தாண்டும் பண்பாட்டு நிகழ்வுகளாகும். ஆனால் ஒரு மதம் சார்ந்தஇந்துச் சங்கம் முடிவெடுக்கும் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது என்று கல்வித்துணையமைச்சர் சிறப்பு உதவியாளரான திரு குணசீலன் விளக்க வேஎண்டும் என்று மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

அதோடு மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்திற்கு இடையூறு ஏற்பட்டால் தமிழ்மொழிக் காப்பகத்திற்கு மலேசியத் தமிழர்கள் அரணாக நிற்பார்கள் என மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் தமிழகரன் தெரிவித்தார்.