(மதியழகன் முனியாண்டி)

முன்னுரை

1. உலகின் மிகப்பெரிய ஊழல் முறைகேடுகளில் 1MDB ஊழல் முறைகேடும் உலக பட்டியலில் இணைந்துள்ளது. World Largest Financial Scandal 1MDB. இப்படிதான் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. நமது நாட்டில் பிரதமராக இருந்த ஒருவர்; அவர் பதவியில் இருக்கும் போதே உலகின் மிகப் பெரிய ஊழல் முறைகேடுகளில் நேரடியாக ஈடுப்பட்டுள்ளார்.

2. மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், அரபு சவுதி, லண்டன், சுவிஸ், அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, லக்சம்பெர்க் போன்ற நாடுகளில் 1MDB முறைகேடுகள் நடந்துள்ளது.

3. 1MDB முறைகேடுகள் பல நாடுகளின் பிம்பத்தை உடைத்தெரிந்துள்ளது. பல நாடுகள் குறித்த நமது பார்வையை மாற்றியுள்ளது. பல நாடுகளின் நேர்மை தன்மையை கேள்வி குறியாகியுள்ளது.

4. சிங்கப்பூர் ஒரு நேர்மையான நாடு. அங்கு எந்த தவறும் முறைகேடுகளும் நடக்காது. ஊழல் என்பது கிடையாது. உலகின் ஊழல் இல்லாத முதல் பத்து நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. ஒரு சிறு தவறுகூட நடக்க விடாத வண்ணம் நடத்தபடுகிற சிறந்த அரசாங்கம் சிங்கப்பூர் என்றுதான் இதுநாள் வரை சிங்கப்பூர் குறித்த நமது நம்பிக்கை இருந்தது. இப்படிதான் நாம் சிங்கப்பூரை நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறோம்.

5. ஆனால் சிங்கப்பூரில் 1MDB விவகாரத்தில் ஊழல்கள் நடந்துள்ளதாக ஆதாரம் நிருப்பிக்கப்பட்டு சில வங்கி அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 140 வருட பழமையான சுவிஸ் நாட்டு வங்கியின் சிங்கப்பூர் கிளை வங்கியை இழுத்து மூடியுள்ளார்கள். 1MDB விவகாரத்தில் சிங்கப்பூரில் பண மோசடி(Money Laundering) நடந்துள்ளதை அந்நாட்டு நிதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

6. நீதி தவறா நாடு என புகழ்பெற்ற இங்கிலாந்தில் 1MDB முறைகேடுகள் நடந்துள்ளது. உலக ஊழல் ஒழிப்புகாகவும் நேர்மைக்காகவும் போராடும் அமெரிக்காவில் 1MDB முறைகேடுகள் நடந்துள்ளது. பணத்தை நம்பக தன்மையோடு பத்திரப்படுத்த சிறந்த இடம் என உலக புகழ்பெற்ற சுவிஸ் நாட்டில் உள்ள சுவிஸ் வங்களில் 1MDB முறைகேடுகள் நடந்துள்ளது.

7. அந்த-அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளை சரி செய்தே 1MDB முறைகேடுகளை அரங்கேற்றி உள்ளார்கள். 1MDB-இல் தவறு நடக்கிறது என்பது தெரிந்து அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

8. ஹாங்காங், லண்டன், சுவிஸ்சர்லாந்து, லக்சம்பெர்க் போன்ற நாடுகளில் Petro Saudi பெயரில் போலியான நிருவனங்களை பதிவு செய்து, அதன் மூலம் 1MDB பணத்தை திசை திருப்பி விட்டுள்ளார்கள்.

9. 1MDB-யின் பெரும்பகுதி ஊழல்களும் முறைகேடுகளும்(Wrongdoing) 2013-ஆம் ஆண்டுக்கு முன்பே நடந்துள்ளது. நமது பிரதமர் துன் மகாதீர் 1MDB குறித்து கேள்விகள் எழுப்பும் வரை உலகில் எந்த நாடுகளிலும் 1MDB முறைகேடுகள் குறித்து அறிந்திருக்கவில்லை. இது போன்ற முறைகேடுகள் அவர்களின் நாட்டில் நடந்தது உள்ளது குறித்து எதுவும் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். அல்லது கண்ணை மூடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

10. கைருடின் மற்றும் மத்தியாஸ் மூலம் அந்த-அந்த நாடுகளில் துன் மகாதீர் போலிஸ் புகாரளித்த பின்புதான் விசாரணையை தொடங்கியுள்ளார்கள். இதில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் சேர்த்து. 1MDB குறித்த குற்றசாட்டை துன் மகாதீர் முன் வைக்கவில்லை என்றால் இப்போது வரை உலகம் முழுவதும் வாய் மூடி மௌனமாகத்தான் இருந்திருப்பார்கள்.

11. இதுநாள் வரை பல உலக நாடுகள் குறித்து நமது பார்வையை, கண்ணோட்டதை 1MDB முறைகேடுகள் உடைத்தெரிந்துள்ளது. பல நாடுகளின் நேர்மையையும், கண்ணியத்தையும், பாதுகாப்பு தன்மையையும் 1MDB முறைகேடுகள் கேள்விகுறியாக்கி உள்ளது.

சிங்கப்பூர்(Singapore)

1.சவுதியில் முதலீடு செய்யப்பட்ட 1MDB-யின் பணத்தின் ஒரு பகுதி சிங்கப்பூர் வழியாக மலேசியாவுக்கு கொண்டுவர முயற்சிகள் நடந்தது. சவுதியில் இருந்து பணம் முதலில் கேமன் தீவுக்கு(லண்டன்) கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து சிங்கப்பூருக்கு கொண்டுவரப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து நேரடியாக நஜிப்பின் அம்பேங்க வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது.

2. 2014-இல் துன் மகாதீர் 1MDB குறித்து குற்றசாட்டுகளை எழுப்பிய போது சிங்கப்பூர் விழித்துக் கொண்டது. உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள். அந்த விசாரணையின் அடிப்படையில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டு சிலருக்கு தண்டனையும் கிடைத்தது.

3. பணமோசடி(Money Laundering) குற்றச்சாட்டின் அடிப்படையில் சிங்கப்பூர் நிதி நிர்வாகம்(Money Authority of Singapore-MAS); சிங்கப்பூர் வணிப பிரிவு மற்றும் சந்தேக பரிவர்த்தனை விசாரணை அலுவலகம்(Commercial Affairs department/Suspicious Transaction Reporting Office) மற்றும் சிங்கப்பூர் சட்டத்துறை அலுவலகத்தோடு(Singapore Attorney General’s Chambers) இணைந்து விசாரணையை தொடங்கியது.

4. முன்னாள் சுவிஸ் BSI வங்கி சிங்கப்பூர் கிளையின் இயக்குனர் யாக் யேவ் சீ(Yak Yew Chee) 1MDB சம்பந்தப்பட்ட பண மோசடியில் ஈடுப்பட்டதாக நான்கு குற்றசாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இவர் இக்குற்றங்களை சிங்கப்பூரில் செய்ததாக நிரூப்பிக்கப்பட்டது.

5. சுவிஸ் BSI வங்கி சிங்கப்பூர் கிளையின் முன்னாள் அதிகாரி இயோன் சியா யேவ் ஃபூங்(Yvonne Seah Yew Foong) 1MDB சம்பந்தப்பட்ட பண மோசடியில் குற்றம் செய்ததாக குற்றம் நிருப்பிக்கப்பட்டு இரண்டு வார ஜெயில் தண்டனையும் பத்தாயிரம் வெள்ளி சிங்கப்பூர் டாலரும் அபராதமாக விதிகப்பட்டது.

6. 1MDB முறைகேடுகளில் ஈடுப்பட்ட சுவிஸ் BSI வங்கி சிங்கப்பூர் கிளையின் மற்றுமொரு முன்னாள் அதிகாரி இயோ ஜியாவெய்(Yeo Jiawei) சிங்கப்பூரில் 30 மாத சிறைத்தண்டனை விதிகப்பட்டது.

7. 1MDB முறைகேடுகளிலும் பணமோசடியிலும் ஈடுப்பட்டதாக குற்றம் நிருப்பிக்கப்பட்டு ஃபல்கோன்(Falcon Bank) வங்கியின் சிங்கப்பூர் கிளையின் முன்னாள் அதிகாரி ஜென்ஸ் ஸ்தெர்செநெகர்(Jens Sturzenegger) என்பவருக்கு 28 வார ஜெயில் தண்டனையும் 128,000 சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிகப்பட்டது.

8.  சிங்கப்பூரில் 1MDB முறைகேடுகள் நடந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டு எழுவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இரண்டு வெளிநாட்டு வங்கிகள் சிங்கப்பூரில் மூடப்பட்டுள்ளது.

9. சுவிஸ் BSI வங்கியின் சிங்கப்பூர் கிளையில் ஜோ லோ வெவ்வேறு பெயர்களில் 18 வங்கி கணக்குகள் ஒரே நாளில் ஆரம்பித்துள்ளார். ஜோ லோவின் தந்தை, சகோதரர், சகோதரி, நண்பர்கள் பெயரிலும் JW Charisma Investment limited, JW Champion Investment, JW Turbocharged Investment போன்ற கம்பனிகளின் பெயரிலும் அந்த வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் 50-க்கும் அதிகமான வங்கி கணக்குகளை சிங்கப்பூர் வங்கிகளில் ஜோ லோ ஆரம்பித்துள்ளார்.

10. அதிகமான வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டது தொடர்பில் சிங்கப்பூர் போலிஸ் கேள்வி எழுப்பியபோது; தாம் உலகம் முழுவதும் பல தொழில்கள் செய்வதாகவும் அதற்கான பண பட்டுவாடாவுக்கு அதிகமான வங்கி கணக்குகள் தேவை என பதிலளித்துள்ளார். இந்த பதிலில் திருப்தி அடைந்த சிங்கப்பூர் அதன் பிறகு 1MDB விவகாரம் வெளியில் வெடிக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

11. இப்படி ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகளின் வழி 1MDB-யின் பணம் உலகம் முழுவதும் ரவுண்டடித்து வந்தது.

அமெரிக்கா(United States of America)

1.1MDB-யின் பணம் பெருமளவில் அமெரிக்காவில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நீதித்துறை(Department of Justice) 1MDB பணமோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை செய்து 132 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

2. அந்த 132 பக்க விசாரணை அறிக்கையில் முக்கிய குற்றவாளியாக ஜோ லோ மற்றும் நஜிப்பின் வளர்ப்பு மகன் ரீசா அஸிஸ்(ரோஸ்மாவிற்கும் அவரின் முதல் கணவருக்கும் பிறந்தவர்) பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. MO 1(Malaysian Official No1) என்று பெயர் குறிப்பிடாமல்; மலேசிய அரசின் முதல் நிலை அதிகாரி என அந்த அறிக்கையில் பல இடங்களில் ஒருத்தர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

3. Malaysian Official No1 யார் என்று பெரிய விவாதமே அப்போது நடந்தது. மலேசிய அரசின் முதல் நிலை அதிகாரி என்பவர் நாட்டின் பிரதமரை குறிப்பதாக பரவலாக பல வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.

4. 3.5 மில்லியன் அமெரிக்கன் டாலர் பணம் 1MDB-யிலிருந்து திருப்பட்டதாக அமெரிக்காவின் தீதித்துறை(department of Justice) தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த பணத்தில் அமெரிக்காவில் ஆடம்பர பங்களாக்களும் ஓவியங்களும் வாங்கப்பட்டதாக அந்த அறிக்கை விவரித்துள்ளது. டிகப்ரியோ(Leonardo DiCaprio-டைட்டானிக் பட ஹீரோ) நடித்த ஹாலிவுட் படம் ஒன்றும் 1MDB-யிலிருந்து திருடப்பட்ட பணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டது.

5 திருடப்பட்ட 1MDB-யின் பணத்தில் அமெரிக்காவில் வாங்கப்பட்ட சில சொத்துகளின் விபரத்தை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.

*200 மில்லியன் அமெரிக்க டாலர்களில் கலிஃபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலஸில் ஆடம்பர பங்களாக்கள் வாங்கப்பட்டுள்ளது.
*130 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இரண்டு ஓவியங்கள் வாங்கப்பட்டுள்ளது.
*265 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இக்குவனியிட்டி ஆடம்பர கப்பல் வாங்கப்பட்டது.
*100 மில்லியன் அமெரிக்க டாலர்களில் ஹாலிவூட் படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் பெயர் The Wolf of Wall Street. ஹீரோ டி கப்ரியோ.

6. ரொக்கமாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அமெரிக்க நீதித்துறையால் கைப்பற்றப்படுள்ளன.

7. ரொக்கம் மற்றும் சொத்துகளாக அமெரிக்காவில் சிக்கிக் கொண்ட 1MDB பணத்தின் மொத்த தொகை 4.5பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

8. 1MDB-யிலிருந்து திருடப்பட்ட பணத்தில் அஸ்திரேலியா மோடல் அழகி மிரண்ட கேர்-க்கு(Miranda Kerr) ஜோ லோ மற்றும் ரிசா அசிஸ் விலையுயர்ந்த பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். வழக்கின் விசாரணைக்கு உதவும் பொருட்டு அப்பரிசு பொருட்களை அஸ்திரேலியா மாடல் அழகி மிரண்டா அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளார்.

9. நஜிப் தற்போது பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டுள்ளதால் அமெரிக்க நீதித்துறை குறிப்பிட்டுள்ள MO1(Malaysian Official No1) யார் என்கிற கேள்விக்கு கூடிய சீக்கிரம் பதில் தெரிந்துவிடும்.

சுவிசர்லாந்து(Switzerland)

1.சுவிசர்லாந்து நாட்டில் 1MDB-யின் பணமோசடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக 2015-இல் துன் மகாதீர் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து துன் மகாதீர் தூண்டுதலில் பேரில் கைருடின் மற்றும் அவரது வக்கில் மத்தியாஸ் இருவரும் சுவிசர்லாந்து போலிஸில் புகாரளித்தனர்.

2. இந்த புகாரின் அடிப்படையில் 2015-இல் சுவிஸ் நாட்டின் சட்டத்துறை தலைவர் தலைமையில் விசாரணை ஆரம்பமானது. ஒரு வருடம் தொடர்ந்த விசாரணையின் இறுதியில் 1MDB பணத்தில் மோசடிகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது.

3. பாரம்பரியமான சுவிஸ் நாட்டின் BSI வங்கி 1MDB முறைகேடுகளில் முக்கியமாக சம்பந்தப்படுள்ளது. UBS, Falcon போன்ற வங்கிகளும் 1MDB விவகாரத்தில் சிக்கிக் கொண்டன.

4. 2011 முதல் 2015 வரையான காலகட்டத்தில் பல மில்லியன்கள் யூரோ டாலர்கள் பணம் சுவிஸ் நாட்டு வங்கிகளில் முறைகேடாக முதலீடு(Deposited) செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களும் விளக்கங்களும் இல்லாமல் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சுவிஸ் நாட்டில் டெபாசிட் செய்யப்பட்டது.

5. 1MDB-யின் துணை நிருவனங்களான SRC மற்றும் Brozen Sky மூலமாக 1MDB-யின் பணம் கேமேன் ஐலண்ட்(Cayman Virgin Island) வழியாக சுவிஸ் நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது.

6. 20 மில்லியன் டாலர்கள் பரிசு(gift) என்றும்; இன்னொரு 90 மில்லியன் டாலர்கள் எந்தவித விளக்கங்களும் ஆவணங்களும் இல்லாமல் சுவிஸ் நாட்டு BSI வங்கியில் SRC(1MDB Subsiadiary) கம்பனி மூலமாக டெபாசிட் செய்யப்பட்டது.

7. பொன்சி முதலீட்டு திட்டம்(A Ponzi Scheme) பிரிவில் இந்த நிதி முதலீட்டை வகை செய்த ஃபின்மா(FINMA)Swiss Financial Market Supervisory Authority) தன் விசாரணையின் முடிவில் 1MDB-யின் 800 மில்லியன் டாலர்கள் பணம் முறைகேடாக பல வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 33.5 மில்லியன் அமெரிக்க டாலர்களில் அமெரிக்காவில் சொத்துகளும், ஹலிவூட்டில் சினிமா படமும் தயாரிக்கப்பட்டதாக அமெரிக்கா நீதித்துறை தன் விசாரணையில் அம்பலப்படுத்தியது.

8. அமெரிக்காவில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட 1MDB-யின் பணம் சுவிஸ் நாட்டு வங்கிகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்ததாக இரு நாட்டு விசாரணையின் முடிவில் தெரிய வந்துள்ளது.

9. கடந்த ஆண்டு SRC(1MDB Subsiadiary) விசாரணைக்காக சிங்கப்பூர் வந்த சுவிஸ் நாட்டு சட்டத்துறை துறை தலைவர் 1MDB தொடர்பில் பண மோசடிகள்/முறைகேடுகள் சுவிஸ் நாட்டில் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

10. சுவிஸ் நாட்டு வங்கிகளில் 1MDB தொடர்ப்பில் பணமோசடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்ப்பில் சில சுவிஸ் நாட்டு வங்கிகளுக்கு 104 மில்லியன் சுவிஸ் டாலர்கள் அபராதமாக விதிகப்பட்டது. 1MDB விவகாரம் தொடர்பான 95 மில்லியன் சுவிஸ் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு சுவிஸ் நாட்டு கசானாவில் ஒப்படைக்கப்பட்டது.

11. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் அபராத பணத்தை மலேசியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த பணம் மலேசியாவுக்கு சொந்தமானது என்று பக்காத்தான் கூட்டணி சார்ப்பில் கடந்த ஆண்டு லிம் கிட் சியாங்கும் டத்தின் ஸ்ரீ வான் அசிசாவும் சுவிஸ் நாட்டுக்கு கடிதம் ஒன்று எழுதினார்கள்.

12. இந்த கடிதம் தொடர்ப்பில் சுவிஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு; அந்த பணத்தை மலேசியாவுக்கு திருப்பி தரக்கூடாது என சுவிஸ் நாட்டு நாடாளுமன்றத்தால் முடிவு எடுக்கப்பட்டது.

13. “Thus, the 104 million Swiss Francs is being claimed by the relevent banks. It cannot be claimed by 1MDB or the government of Malaysia as the money does not belong to 1MDB.”- Swiss Finance Minister Ueli Maurer.

லக்சம்பெர்க் (Luxembourg)

1.சிங்கப்பூர், சுவிஸ் நாட்டுக்கு அடுத்து லக்சம்பெர்க் நாட்டு இரண்டு வங்கிகளில் 1MDB-யின் பணம் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. லக்சம்பெர்க் நாட்டு வங்களில் டெபாசிட் செய்யப்பட்ட 1MDB-யின் பணம் பிறகு அங்கிருந்து பிறநாடுகளுக்கு திருப்பிவிடப்படுள்ளது.

2. உலகம் முழுவதும் பல நாடுகளில் 1MDB விவகாரம் வெடித்த போது லக்சம்பெர்க் நாட்டிலும் 1MDB பணமோசடி விவகாரம் சர்ச்சையாக எழுந்தது. 2015-இல் லக்சம்பெர்க் அரசு அதிகாரிகள் உடனே தங்கள் விசாரணையை தொடங்கினார்கள்.

3. 2012-ஆம் ஆண்டு 1MDB-க்கு சொந்தமான நான்கு பணப் பட்டுவாடாவும்(Monay Transfer) 2013-ஆம் ஆண்டு ஒரு பணப் பட்டுவாடாவும் லக்சம்பெர்க் வங்கிகளில் நடந்துள்ளது.

4. 1MDB பணமோசடியில் சிக்கிய லக்சம்பெர்க் நாட்டு வங்கியான எட்மோண்ட் ரோத்ஸ்சைல்ட்(Edmond Rothschild) வங்கிக்கு எதிராக குற்றம் உறுதி செய்யப்பட்டு, 9 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டது.

அபுதாபி (சவுதி அரேபியா) Abu Dhabi (Saudi Arabia)

1.1MDB-யின் முறைகேடுகள் மற்றும் பணமோசடிகளின் மையப்புள்ளி இரு நாடுகள். ஒன்று நமது நாடு. மலேசியா. இன்னொன்று அபுதாபி(சவுதி அரேபியா). இந்த இரு நாடுகளிலிருந்துதான் எல்லா சிக்கல்களும் முறைகேடுகளும் பணமோசடிகளும் ஆரம்பமானது.

2. மலேசியாவின் 1MDB நிறுவனம் அபுதாபியில் உள்ள அரசு சார்ந்த முதலீட்டு நிருவனங்களோடு(State wealth sovereign fund) இணைந்து Joint Venture மூலமாக முதலீடு செய்தது. அபுதாபியில் 1MDB Joint Venture-ராக இணைந்த நிருவனத்தின் பெயர் பெட்ரோ சவுடி(IPIC).

3. ஆறே மாதத்தில் ஒப்பந்தம் முறிந்த பிறகு முதலீடு செய்யப்பட்ட பணம் மலேசியாவுக்குள் கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி நடக்காமல் போனது. 1MDB-யில் முதலீடு செய்யப்பட்ட பணம் முறைகேடாக லண்டனில் உள்ள கேமென் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து சுவிசர்லாந்து, லக்சம்பெர்க் நாடுகளுக்கு போனது. பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்கும் சிங்கபூருக்கும் கொண்டு செல்லப்பட்டது.

4. சவுதி அரேபியாவில் 1MDB மீதான பெரும்பகுதி விசாரணை நடந்து முடிந்து விட்டது. நஜிப் அப்போது மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்ததால் முழுமையான விசாரணை நடக்கவில்லை. மலேசியாவின் சட்டத்துறை தலைவர் அபுதாபியோடு போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என குறை சொல்லப்பட்டது.

5. பெட்ரொ சவுடியின் தலைவராக இருந்த கடிம் அல் குபாய்சி(Kadeem al-Qubaisi) 473 மில்லியன் அமெரிக்க டாலர்களை தன் சொந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்துக் கொண்டார் என்கிற குற்றசாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

6. 1MDB பெட்ரொ சவுடியோடு வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருந்தது. ஜோ லோ மற்றும் கடிம் அல் குபாய்சி இருவருமே 1MDB-யின் பணமோசடியில் ஈடுப்பட்ட முக்கியமானவர்கள் என கருதப்படுகிறது. கடிம் அல்-குபாய்சி மிகப்பெரிய பணக்காரர். ஃபல்கான் வங்கியின் உரிமையாளராக இருந்துள்ளார். சவுடி அரச குடும்பத்தில் பலருக்கு மிக நெறுக்கமானவர். இவர் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு மட்டும் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவரைப் பற்றி இணையத்தில் நிறைய தகவல்கள் உண்டு. தேடிப் படித்துக் கொள்ளலாம்.

7. தற்போது அமைந்துள்ள நமது புதிய அரசாங்கம் 1MDB முறைகேடுகள் பணமோசடிகள் குறித்து தீவிர விசாரணையில் இருக்கிறது. 1MDB முறைகேடுகளையும் பணமோசடிகளையும் விசாரிக்க சிறப்பு அமைக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்துறை தலைவர் வந்துள்ளார்.

8. சவுடியில் நடந்த 1MDB குறித்த பல மோசடிகள் முறைகேடுகள் இனி முழுமையான விசாரணைக்கு உட்பட்டு பல உண்மைகள் வெளியே வரும்.

ஹாங்காங்(Hong Kong),  இங்கிலாந்து(UK)

1. ஜோ லோ ஆரம்பத்தில் ஹாங்காங் நாட்டில் நிதிசம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருந்தார். பிறகு அரபு நாடுகளில் ஏற்பட்ட தொடர்புகளின் மூலம் தன் ஹாங்காங் வர்த்தகத்தை உலகின் பல நாடுகளுக்கு கொண்டு சென்றார்.

2. 1MDB-யின் பணத்தை முறைகேடுகடாக பல உலக வங்கிகளுக்கு கொண்டு செல்ல ஹாங்காங் நாட்டை ஒரு தளமாக பயன்படுத்திக் கொண்டார். பெட்ரோ சவுடியின் பெயரில் போலியான நிருவனங்களை ஹாங்காங் நாட்டில் பதிவு செய்திருந்தார்.

3. அதே போல் சவுடியிலிருந்து முதலில் பணத்தை இங்கிலாந்தில் இருக்கும் கெமென் தீவுக்கு கொண்டு சென்றார்கள். பெட்ரோ சவுடியின் பெயரில் போலியான கம்பனிகளை பதிவு செய்து பிற நாடுகளுக்கு பணத்தை திருப்பி விட்டனர்.

4. 1MDB பணத்தை கொண்டு இங்கிலாந்தில் மில்லியன்களில் பங்களா வாங்கப்பட்டது.

ஆஸ்திரேலியா (Australia) ,தாய்லாந்து (Thailand)

1.1MDB-யின் பணத்தில் ஆஸ்திரேலியாவில் சொத்துக்கள் வாங்கப்பட்டதன் தொடர்ப்பில் அந்நாட்டில் விசாரணை நடந்து வருகிறது.

2. பெட்ரோ சவுடியில் IT துறையின் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த சேவியர் ஜுஸ்தோ 1MDB முறைகேடுகள் சம்பந்தப்பட்ட தகவகல்ளை திருடிக் கொண்டு தாய்லாந்து நாட்டுக்கு வந்துவிட்டார். இங்கிருந்து 1MDB சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த முறைகேடுகள் தொடர்புடைய தகவல்களை வெளியிடாமல் இருக்க பேரம்(Blackmail) பேசியதாக தாய்லாந்து போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னுரை

1.1MDB-யின் மையப்புள்ளி மலேசியாதான். உலகின் மிகப்பெரிய முறைகேடாக கருதப்படும் 1MDB மலேசியாவிலிருந்துதான் தொடங்கியது. நஜிப் செய்த முறைகேடுகளால் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அலாரம் அடித்தது போல் விழித்துக் கொண்டனர்.

2. பணமோசடிகளை கண்டறியவும் தடுக்கவும் லம்சம்பெர்க் சுவிஸ்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். தங்கள் நாட்டு சட்டங்களில் ஓட்டை இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளார். பல நாடுகளுக்கு இதனால் மிகவும் கெட்ட பெயர் ஆகிவிட்டது.

3. அடுத்த கட்டுரை முழுக்க முழுக்க மலேசியாவில் நடந்த முறைகேடுகள் குறித்து எழுதவிருப்பதால்; இந்த கட்டுரையில் மலேசிய குறித்து மேலும் விவரிக்க தேவை இல்லை என நினைக்கிறேன்.

4. உலகம் முழுவதும் பல நாடுகளின் அரசாங்க அமைப்புகள்(Government Agency’s) 1MDB குறித்த விசாரணையை 2015-ஆம் தொடங்கி நடத்தி வருகிறது. அதன் விபரம் பின் வருமாறு.

*லக்சம்பெர்க் (Luxembourg) – Public Prosecuters Office and District Tribunal Luxembourg
*சிங்கப்பூர்(Singapore) – Singapore Polis Commercial Affairs Dept./Suspicious Transaction Reporting Office, Monay Authority of Singapore and Singapore AG Office
*சுவிஸ்(Switzerland) – Swiss AG Office and Swiss Finacial Market Supervisory Authority(FINMA)
*அமெரிக்கா(America) – Dept of Justice and FBI
*ஹாங்காங்(Hong kong) – Hong kong Police
*இங்கிலாந்து(UK) – Serious Fraud Office
*சவுதி(UAE) – Police
*ஆஸ்திரேலியா(Australia) – Australia Securities & Investment Commission
*தாய்லாந்து(Thailand) – Thailand Police
*மலேசியா – Special Task Force

 

இது அநேகனின் வாசகர் மதியழகன் முனியாண்டியின் எழுதிய கட்டுரையாகும். இது அநேகனின் நிலைப்பாடு அல்ல – ஆசிரியர்

1எம்டிபி : நடந்தது என்ன?

1எம்டிபி : நடந்தது என்ன?

 

.

யார்-யார் 1MDB-யில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பாகம் 2

யார்-யார் 1MDB-யில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பாகம் 2